லாரியில் குண்டுக்கற்கள் ஏற்றி வந்த டிரைவர் கைது

பணகுடி அருகே அனுமதி இன்றி லாரியில் குண்டுக்கற்கள் ஏற்றி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-04 20:29 GMT
நெல்லை:
பணகுடி அருகே காவல்கிணறு சோதனைச்சாவடி அருகில் மண்டல துணை தாசில்தார் பேட்ரிக் சிலுவை அந்தோணி நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில், முறையான அனுமதி சீட்டு இல்லாமல் அளவுக்கு அதிகமான எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பேட்ரிக் சிலுவை அந்தோணி பணகுடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி விசாரணை நடத்தி, அனுமதியின்றி அதிக எடையுடைய குண்டுக்கற்களை ஏற்றி வந்த லாரி டிரைவரான கேரள மாநிலம் கொத்தமங்கலம், மனக்கம்படி பகுதியைச் சேர்ந்த ஷானாவாஸ் (33) என்பவரை கைது செய்தார். 

மேலும் செய்திகள்