திசையன்விளையில் குழந்தைகளுடன் பெண் ‘திடீர்’ சாலை மறியல்
திசையன்விளையில் குழந்தைகளுடன் பெண் ‘திடீர்’ சாலை மறியலில் ஈடுபட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே பெட்டைகுளத்தை சேர்ந்தவர் சாம்சன். இவருடைய மனைவி புஷ்பா (வயது 28), பட்டதாரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் புஷ்பா தனது குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு திசையன்விளை தபால் நிலையத்திற்கு பல முறை வந்துள்ளார். அப்போது எல்லாம் இன்று பதிவு செய்பவர்களுக்கு டோக்கன் வழங்கி விட்டோம் என தபால் நிலைய ஊழியர்கள் கூறியுள்னர். நேற்று காலை மீண்டும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தபால் நிலையம் வந்து ஆதார் பதிவு செய்யும்படி கூறியுள்ளார். அப்போது அவர்கள் ஏற்கனவே டோக்கன் வழங்கிவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பா தனது குழந்தைகளுடன் தபால் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மறியல் செய்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆதார் பதிவு செய்ய ஏற்பாடு செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று அவரது குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது.