கும்பகோணத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.8 ஆயிரத்துக்கு ஏலம் விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பகோணத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.8 ஆயிரத்துக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-08-04 18:56 GMT
கும்பகோணம்:-

கும்பகோணத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.8 ஆயிரத்துக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

பருத்தி ஏலம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையிலும் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையிலும் இந்த ஏலம் நடந்தது. 
கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் மொத்தம் 3 ஆயிரத்து 803 குவிண்டால் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில், திருப்பூர், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 வியாபாரிகள் ஏலம் கேட்டனர். 

விவசாயிகள் மகிழ்ச்சி

இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 69-க்கு ஏலம் போனது. குறைந்தபட்ச விலையாக குவின்டால் ஒன்று ரூ.7 ஆயிரத்து 259-க்கு ஏலம் போனது. சராசரி விலையாக ரூ.7 ஆயிரத்து 479 என நிர்ணயிக்கப்பட்டது. 
பருத்தி ரூ.8 ஆயிரத்துக்கும் மேல் விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்