போலீஸ் உயர் அதிகாரிகளை ஆபாசமாக பேசிய ஏட்டு பணியிடை நீக்கம்
தேவகோட்டை அருகே போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து ஏட்டு ஒருவர் ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தேவகோட்டை, ஆக
தேவகோட்டை அருகே போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து ஏட்டு ஒருவர் ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வலைதளங்களில் பரவிய ஆடியோ
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பணிபுரிந்து வரும் 2 உயர் போலீஸ் அதிகாரிகள் பற்றி போலீஸ் ஏட்டு ஒருவர் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்த ஆடியோவை பேசி வெளியிட்டது யார்? என ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் அவர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஏட்டு மூர்த்தி என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் சிவகங்கை ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
பணியிடை நீக்கம்
பின்னர் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் ஏட்டு மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.