கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,ஆக
சிவகங்கை வண்டவாசி ரோடு முத்துநகரை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 60). இவரது மனைவி ராணி (58). இவர்களுக்கு ஜோசப் சேவியர் (25), கிறிஸ்டோபர் (20) என்ற 2 மகன்கள் உண்டு. இவர்கள் 2 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தனர். இருதயராஜூக்கு சொந்தமான பயன்பாடு இல்லாத வீட்டில் கடந்த 25-ந்தேதி சிலர் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். இதை தடடிக் கேட்டபோது கிறிஸ்டோபர், ஜோசப் சேவியர் ஆகிய 2 பேரையும் அந்த கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இதைத் தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீசார் இந்த இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே மருதுபாண்டி, நந்தகுமார், வசந்த், பாலாஜி, சரவணன், முரளி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தேவகோட்டையை சேர்ந்த ஆனந்த் என்ற அமர் ஆனந்தை (26) கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.