`நீட்' தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் `நீட்' தேர்வுக்கு மாணவர்கள் தயாராக தொடங்கியுள்ளனர்.;
புதுக்கோட்டை, ஆக.5-
புதுக்கோட்டை மாவட்டத்தில் `நீட்' தேர்வுக்கு மாணவர்கள் தயாராக தொடங்கியுள்ளனர். அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 750 பேர் ஆன்லைனில் பயிற்சி பெறுகின்றனர்.
`நீட்’ தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்பில் சேர்வதற்கு `நீட்' நுழைவத்தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. `நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து தரப்பினரின் வலியுறுத்தலாக உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு `நீட்' தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது. அதேபோல இந்த ஆண்டு `நீட்' தேர்வும் தாமதமாக வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பம் கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. `நீட்' தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் தயாராக தொடங்கி உள்ளனர். கடந்த ஆண்டில் மருத்துவப்படிப்பில் அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆன்லைனில் பயிற்சி
இந்த நிலையில் தற்போது `நீட்' தேர்வுக்கு மாணவ-மாணவிகள் தயாராக தொடங்கி உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வழக்கம் போல பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதேபோல மற்ற பள்ளி மாணவர்களும் பயிற்சி மையங்களிலும், பிறரது வழிகாட்டுதலிலும் தேர்வுக்கு தயராகி வருகின்றனர். தன்னார்வலர்களும் கிராமப்புற மாணவர்களுக்கு `நீட்' தேர்வு தொடர்பாக பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் `நீட்' தேர்வுக்கு தயராகி வருகின்றனர். தற்போது 750 பேர் பயிற்சி பெற்று வருவதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எண்ணிக்கை அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 425-க்கும் மேற்பட்டோர் `நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர். `நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
தேர்வுக்கான விண்ணப்ப தேதி காலக்கெடு முடிந்த பிறகு தான் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வுஎழுதவிண்ணப்பித்துள்ளனர் என்பது தெரியவரும் எனவும் கல்வித்துறையினர் தெரிவித்தனர். 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.