ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள்: என்ஜினீயரிங் படிப்பில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்

ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள்: என்ஜினீயரிங் படிப்பில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் 24-ந்தேதி கடைசி நாள்.

Update: 2021-08-04 17:19 GMT
சென்னை,

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு மாணவ-மாணவிகள் முதலில் விண்ணப்பப்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் நடப்பாண்டில் 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம்(ஜூலை) 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்காக ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் விண்ணப்பப்பதிவு தொடங்கி 8-வது நாளான நேற்று வரை (மாலை நேர நிலவரப்படி) ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 610 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் 74 ஆயிரத்து 307 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி இருப்பதாகவும், 56 ஆயிரத்து 939 பேர் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகை யில் நடப்பாண்டில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் விண்ணப்பப்பதிவு முடிந்த நேரத்தில், காலியாக இருந்த இடங்களை விட குறைவாகவே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதனால் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே கிட்டதட்ட 60 ஆயிரம் இடங்கள் காலியாகின. ஆனால் நடப்பாண்டில் அந்த நிலை இருக்க வாய்ப்பில்லை. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 24-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

மேலும் செய்திகள்