கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2021-08-04 17:05 GMT
கறம்பக்குடி, ஆக.5-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கறம்பக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகம்மது ஜான் தலைமை தாங்கினார். தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது மன்சூர் முன்னிலை வகித்தார். விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம் கண்டன உரை ஆற்றினார். இதில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஒன்றிய செயலாளர் விஜயன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் சந்திரபாண்டியன், ம.தி.மு.க. நகர செயலாளர் கணேசன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஆசை அப்துல்லா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்