திருவாரூர்-காரைக்குடி இடையேயான ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
கொேரானா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட திருவாரூர்-காரைக்குடி இடையேயான ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. கூடுதல் கட்டணம், பயண நேரத்தை குறைக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர்:
கொேரானா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட திருவாரூர்-காரைக்குடி இடையேயான ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. கூடுதல் கட்டணம், பயண நேரத்தை குறைக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவை
திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ‘டெமு’ ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக இந்த ரெயில் கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.
தற்போது கொேரானா தொற்று குறைந்து சில ரெயில்கள் மீண்டும் இயக்கபட்டு வரும் நிலையில் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்திலும் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என ரெயில் உபயோகிப்போர் சங்கம் மற்றும் எம்.பி.க்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
மீண்டும் தொடங்கியது
இதனைத்தொடர்ந்து நேற்று முதல் திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் சேவை தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று காலை 8.15 மணிக்கு திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கொடியசைக்க ரெயில் சேவை தொடங்கியது. இதையடுத்து திருவாரூர் ரெயில் உபயோகிப்பாளர் சங்க நிர்வாகிகள், ரெயில்வே துறையினர், பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பேட்டி
இதுகுறித்து ெரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ெரயில் உபயோகிப்போர் சங்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு மையம் போன்றவைகளின் கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ெரயில்வே திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு ரெயில் சேவை தொடங்கியது மகிழ்ச்சியாக உள்ளது.
திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள சில ஊர்களில் நிறுத்தங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணம், இந்த ஊர்களில் பயணச்சீட்டு முகவர்கள் இல்லாமை தான். இதுதவிர இந்த ரெயிலில் எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயண நேரத்தை குறைக்க வேண்டும்
இந்த கூடுதல் கட்டணத்தினால் பயணிகள் பாதிக்கப்படுவதால் சாதாரண பயணிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லவும், இயன்றவரை பயண நேரத்தை குறைக்கவும் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட மேலாளருக்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த நியாயமான கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம்.
இந்த தடத்தில் உள்ள அனைத்து ரெயில்வே கேட்டுகளுக்கும் ‘கேட் கீப்பர்’ பணியாளர்களை விரைந்து நியமித்து சென்னை மற்றும் வடமாநிலங்களில் இருந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வழங்கிட வேண்டும்.
மேலும் இந்த தடத்தில் போதுமான அளவிற்கு பயணிகள் ரெயில்கள் இயக்கவும், சரக்கு போக்குவரத்தினை விரைந்து தொடங்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்தினரை கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சேவை கிடையாது
திருவாரூர்-காரைக்குடி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.15 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு் மதியம் 2.15 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு திருவாருரூக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரெயில் சேவை கிடையாது. அன்றைய தினம் பராமரிப்பு பணிக்காக திருச்சிக்கு ரெயில் செல்வதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.