மரவள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.;
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள புழுதேரி வேளாண்மை அறிவியல் மையத்தின் சார்பாக விவசாயிகளுக்கு மரவள்ளிக்கிழங்கு சாகுபடி குறித்து பயிற்சி நடந்தது. இதற்கு நபார்டு வங்கி உதவி மேலாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் மையம் முதுநிலை விஞ்ஞானி திரவியம் முன்னிலை வகித்தார். இதில் மாவுப்பூச்சி வேளாண்மை தோட்டக்கலை துறை திட்டங்கள், மண் பரிசோதனை, இரகங்கள் மற்றும் விதை குச்சிகள் தேர்வு, நடவு முறை ஊடுபயிர் சாகுபடி ஒருங்கிணைந்த உர மேலாண்மை சொட்டு நீர் பாசனம் பூச்சி நோய் மேலாண்மை மாவுப்பூச்சி மேலாண்மை போன்ற பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்பம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் 9488967677, 9843883221 ஆகிய தொலைபேசி எண்களில் வேளாண்மை அறிவியல் மையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், தோட்டக்கலை உதவி இயக்குனர் இம்ரான், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் கவியரசு உள்பட்ட விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.