முத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி

முத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி

Update: 2021-08-04 16:40 GMT
முத்தூர், 
முத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விபத்து
முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சி மூத்தாம்பாளையத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவரது மகன் சிவகுப்புச்சாமி (வயது 26). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில்  முத்தூர் புறப்பட்டு வந்தார். பின்னர் இரவு 11 மணிக்கு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். 
 முத்தூர் - ஊடையும் சாலை பொன்னாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது திடீரென்று எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவகுப்புச்சாமி தலையில் பலத்த அடிபட்டு, சாலையில் கீழே விழுந்தார். 
பலி
இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து வந்து சிவகுப்புச்சாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிவகுப்புச்சாமியை பரிசோதித்த  டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்