ஓசூரில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற சிறுவன் கைது
ஓசூரில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
ஓசூரில்,
மோட்டார் சைக்கிளை திருட முயன்ற சிறுவன் கைது.
ஓசூர் சிப்காட் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் சண்முகபிரியன் (வயது 24). என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இதை கவனித்த சண்முகபிரியன் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து ஓசூர் சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் 17 வயது சிறுவன் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.