தேன்கனிக்கோட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொழந்தையப்பன்தொட்டி கிராமத்தில் சிலர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சரவணண் தளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த கிராமத்தில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆஞ்சனப்பா (வயது 51), மாதேவன் (46) ஆகிய 2 பேரும் மாட்டு கொட்டகையில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, ஆஞ்சனப்பா, மாதேவனை கைது செய்தனர்.