காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-04 15:04 GMT
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சங்கால்பட்டியை சேர்ந்தவர் ராமு (வயது 27). கூலித்தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த ஐஸ்வர்யா (20) என்பவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில் ராமு அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஐஸ்வர்யா கண்டித்துள்ளார். 
இதனால் மனமுடைந்த ராமு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது ராமு விஷம் குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமு இறந்துபோனார். 
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்கால்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்