கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பலவித வடிவம் மற்றும் வண்ணங்கள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகள் பறந்து திரிகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை கிராம பகுதியில் நேற்று சுமார் 15 சென்டி மீட்டர் நீளமும், 10 சென்டிமீட்டர் அகலமும் கொண்டு அளவில் பெரிதாகவும், மிக அழகாகவும் அரிய வகை வண்ணத்துப்பூச்சி பாறை மீது அமர்ந்திருந்தது.
இந்த வண்ணத்துப்பூச்சி சாதாரண வண்ணத்துப்பூச்சிகளை விட பெரிதாக காணப்பட்டதால், அதை பொதுமக்கள் அதனை ஆச்சரியத்துடன் கண்டுகளித்ததுடன், தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துச்சென்றனர்.