யூனியன் அலுவலகத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகை

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டனர்.

Update: 2021-08-04 13:29 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் சுப்பையா தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் ஆணையாளர் பாலசுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் அனுமதி இல்லாத வீட்டு மனைகளுக்கு வரன்முறை சான்று கேட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் மனு கொடுத்தவர்களுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. மனுக்கள் மீது பரிசீலனை செய்து தாமதம் இன்றி சான்று வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் பாலசுப்பிரமணியம், உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் அவர்கள் திரும்பிச் சென்றார்கள். போராட்டத்தில் தே.மு.தி.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள்சாமி, பிரபாகரன், பிரகாஷ், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் பழனி, மாவட்ட மாணவரணி செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்