வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம், வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 22). பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த ஒரு ஆண்டாக வேலை தேடி அலைந்து வந்தார்.
இந்த நிலையில் சரியான முறையில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்து வந்தார்.
நேற்று காலை அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹரிஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து உடனடியாக அவரது பெற்றோர் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.