சேலம் மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா-தொற்றுக்கு 4 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன், 4 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-08-03 22:25 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிப்பதும், சில நாட்களில் குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் 82 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 20 பேர் உள்பட எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி என மாவட்டம் முழுவதும் 75 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 93 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 134 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 1,004 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,566 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்