மருமகளுக்கு கத்திக்குத்து; மாமனார் கைது

கடையம் அருகே மருமகளை கத்தியால் குத்திய மாமனாரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-03 21:41 GMT
கடையம்:
கடையத்தை அடுத்த கீழக்கடையம் அருேக உள்ள குமரேசகாலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ஸ்ரீஜா (வயது 43). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இதனால் மாமனார் சுப்பிரமணியன் வீட்டில் ஸ்ரீஜா வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு ஸ்ரீஜா வந்தார். 

அப்போது வீட்டில் உள்ள பாத்திரங்கள், பொருட்களை காணவில்லை என அவர் கேட்டார். அப்போது சுப்பிரமணியன் அவதூறாக பேசி, தன் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீஜா கழுத்து பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஸ்ரீஜா, தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்