போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பாளையங்கோட்டை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 23). இவர் ஒரு சிறுமியிடம் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இவர் சம்பவத்தன்று சிறுமியின் வீட்டு முன் நின்று அவரது தந்தைக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை ஊரக அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரசிதா விசாரணை நடத்தி, ரமேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.