வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அம்பை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி கோட்டைவிளை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் இசக்கி பாண்டி என்ற பாண்டி (வயது 20). இவர் மீது கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று இசக்கிபாண்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழங்கினார்.