கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் இன்றி நடந்தது.
சாத்தூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் இன்றி நடந்தது.
இருக்கன்குடி
ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் விழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பஸ்கள் மூலமாகவும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தநிலையில் கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆடிப்பெருக்கான நேற்று பக்தர்கள் வருைகயின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
இருக்கன்குடி வரும் வழியில் வழிகளான சாத்தூர் ெரயில்வே பீடர் ரோடு, நத்தத்துப்பட்டி விளக்கு, பெரிய கொல்லபட்டி ரோடு, நென்மேனி முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் வரும் வாகனங்களை மறித்து திருப்பி அனுப்பினர்.
பக்தர்கள் இன்றி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல சாத்தூர் முக்குராந்தலில் உள்ள மாரியம்மன் கோவில், நாடார் கீழத்தெருவில் உள்ள மாரியம்மன், நென்மேனி ரோட்டில் உள்ள செல்லியாரம்மன் கோவில், படந்தால் சக்தி மாரியம்மன், கண்மாய் சூரங்குடி காளியம்மன் ஆகிய கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சதுரகிரி
ஆடி பெருக்கையொட்டி வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு சென்றனர். அங்கு பக்தர்கள் மொட்டையடித்து, சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோவில், முத்தாலம்மன் கோவில், மந்தை மாரியம்மன் கோவில், அம்மச்சாரம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் பக்தர்கள் இன்றி ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.