சேரன்மாதேவியில் மலைப்பாம்பு பிடிபட்டது

சேரன்மாதேவியில் விவசாய நிலத்தின் வேலியில் சிக்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2021-08-03 20:16 GMT
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி - நெல்லை டவுன் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் விவசாய நிலத்தின் வேலியில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கி இருந்தது. இதுகுறித்து சேரன்மாதேவி தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, வேலியில் சிக்கி இருந்த மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்