திருவோணம் அருகே 1 ஏக்கர் தைல மரங்கள் தீயில் எரிந்து நாசம் சதி வேலையா? போலீசார் விசாரணை
திருவோணம் அருகே 1 ஏக்கர் நிலப்பரப்பிலான தைல மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மது அருந்தியவர்கள் இந்த சதிச் செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:-
திருவோணம் அருகே 1 ஏக்கர் நிலப்பரப்பிலான தைல மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மது அருந்தியவர்கள் இந்த சதிச் செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தீயில் எரிந்து நாசம்
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேல ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆறு அருகே அதே பகுதியை சேர்ந்த முனியன், ரேவதி, சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. நேற்று பகல் 12 மணி அளவில் திடீரென இந்த தோப்பில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதன் அருகே வீடுகளும், வைக்கோலும் இருந்ததால் ஆபத்தை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் விவசாயிகள் பெரும் திரளானோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாய ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல கறம்பக்குடி தீயணைப்பு படையினரும், திருவோணம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்
இருப்பினும் இந்த விபத்தில் 1 ஏக்கர் பரப்பிலான தைல மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. விவசாயிகள் போராடி தீயை அணைத்ததால் அருகில் இருந்த வீடுகள் உள்ளிட்டவைகள் இந்த தீ விபத்தில் இருந்து தப்பின.
போலீஸ் விசாரணை
தீப்பிடித்து எரிந்த பகுதிக்கு அருகிலுள்ள மதுக்கடையில் மது வாங்கி, அந்தப் பகுதியில் மதுஅருந்தியவர்கள் தைல மரக் காட்டில் தீ வைத்து சதி வேலையில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.