நகை-பணம் பறிப்பு

‘லிப்ட்’ கொடுப்பது போல் முதியவரை அழைத்து சென்று நகை-பணம் பறிப்பு

Update: 2021-08-03 18:36 GMT
பனைக்குளம்
உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை களஞ்சியம் நகரை சேர்ந்தவர் முத்துக்கூரி(வயது 67). இவர் பணி நிமித்தமாக ராமநாதபுரம் வந்து விட்டு பின்னர் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பிரப்பன்வலசைக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் முத்துக்கூரியிடம் எங்கே போறீங்க என கேட்டனர். அவர் பிரப்பன்வலசை போறேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள், நாங்களும் அங்கே தான் போகிறோம். உங்களை பிரப்பன்வலசையில் இறக்கி விடுகிறோம் என்று சொல்லி முதியவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு சென்றனர். பனைக்குளம் அருகே நதிப்பாலம் பகுதியில் சென்றபோது, அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். பின்னர் முதியவர் அணிந்திருந்த 2½ பவுன் மோதிரம் மற்றும் செல்போன், ரூ.500 ஆகியவற்றை பறித்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்