ஒடுகத்தூர் அருகே; உணவில் விஷம் வைத்து கணவனை கொலை செய்த ெபண் கைது
ஒடுகத்தூர் அருகே உணவில் விஷம் வைத்து கணவனை ெகான்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே உணவில் விஷம் வைத்து கணவனை ெகான்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
2-வது திருமணம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த அகரம் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் சூரியமுத்து (வயது 70). கூலி வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலா (45) என்ற பெண்ணை சூரிய முத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
நிர்மலாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகள் உள்ளாள். இது தெரிந்திருந்தும் நிர்மலாவை சூரியமுத்து திருமணம் செய்து உள்ளார்.
திருமணத்துக்குப் பிறகும் நிர்மலாவுக்கு பழைய தொடர்பு இருந்தது. இது தொடர்பாக நடத்தையில் சந்தேகப்பட்டு சூரியமுத்து கேட்டபோது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
விஷம் கலந்த உணவு
ஆத்திரமடைந்த நிர்மலா கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இந்த நிலையில் சூரியமுத்து திங்கட்கிழமை காலை அதே பகுதியிலுள்ள காந்தராஜ் என்பவர் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நிர்மலா சூரியமுத்து சாப்பிட வைத்திருந்த உணவில் விஷத்தைக் கலந்து உள்ளதாக தெரிகிறது. இதை அறியாத சூரியமுத்து விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளார். அவரோடு சேர்ந்து காந்தராஜ் (30) என்பவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளார்.
அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த மனோ (25) சாப்பிட வந்தார். ஆனால் சூரியமுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவில் ஒருவித வாசனை வீசியதால் அவர் உணவை மனோ சாப்பிடவில்லை.
நுரை தள்ளியபடி விழுந்தனர்
சிறிது நேரம்கழித்து சூரியமுத்து மற்றும் காந்தராஜ் இருவரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த சூரியமுத்து இறந்து விட்டார்.
அவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட காந்தராஜிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கைது-வாக்குமூலம்
இது குறித்து சூர்யமுத்துவின் மகன் வேலு கொடுத்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாவை பிடித்து விசாரணை செய்து வந்தனர். அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
போலீசாரிடம் நிர்மலா கூறியிருப்பதாவது:-
எனக்கு 14 வயதில் மகள் உள்ளாள். இந்த நிலையில் நான், எனது மகள், கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் என அனைவரும் ஒன்றாகவே வசித்து வந்தோம்.
எனது கணவர் சூரியமுத்து, எனது நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் அடித்து துன்புறுத்தி வந்தார். கடுமையான சொற்களால் பேசி வந்தார் மேலும் எனது மகளை படிக்க வைப்பதற்கு அவர் எந்த சுதந்திரமும் தரவில்லை. அதுமட்டுமல்லாமல் மகளை வேறு ஒரு கண்ணோட்டத்தோடு பார்த்து வந்தார்.
இதனால் கணவர் சூரியமுத்து இருந்தால் மகளை படிக்க வைக்க முடியாது. நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைக்க முடியாது என்று நினைத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இந்த நிலையில் அவர் எடுத்துச்செல்லும் உணவில் விஷத்தைக் கலந்து வைத்தேன். அதனை சாப்பிட்ட நிலையில் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நிர்மலாவை போலீசார் கைது செய்தனர்.