ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சுத்தம் செய்யும் பணி
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவில்களில் கூட்டம்
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கொரோனா 2-வது அலை யின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்தது.
இதற் கிடையில் அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஆடி மாதம் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இதனால் கொரோனா மீண்டும் பரவக்கூடிய நிலை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சுத்தம் செய்யும் பணி
மேலும் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் 3 நாட்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவில் உட்பிரகாரம், தண் ணீர் தொட்டி, சுற்றுச்சுவர்கள், விமான கலசங்கள், மண்டபம், கோவில் சிற்பங்கள், தூண்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை கோவில் உதவி ஆணையர் கருணாநிதி மேற்பார்வையில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் கோவில் ஊழியர்கள், உழவார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.