குன்னூர் நீதிமன்றம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி
குன்னூர் நீதிமன்றம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
குன்னூர் அருகே காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவரும், இவரது மனைவியும் மகன் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த 6 மாத காலமாக குடும்ப பிரச்சினை காரணமாக ராஜேந்திரனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து பிரச்சினை செய்து வருவதாகவும், அதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தந்தை ராஜேந்திரன் குன்னூர் நீதிமன்றம் முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.