மலைக்கோட்டாலம் கோமுகி ஆற்றில் மர்மமான முறையில் இறந்த வாலிபரின் நண்பர் தூக்குப்போட்டு தற்கொலை
மலைக்கோட்டாலம் கோமுகி ஆற்றில் மர்மமான முறையில் இறந்த வாலிபரின் நண்பர் தூக்குப்போட்டு தற்கொலை
சின்னசேலம்
கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி கிராமத்தை தேர்ந்த பாலு மகன் பிரகாஷ் (வயது 21). இவர் சேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று அதிகாலை சின்னசேலம் அருகே உள்ள மேலூரில் தனது உறவினர் வீட்டின் அருகே உள்ள ஓடையில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரகாஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமுகி ஆற்றில் மர்மமான முறையில் இறந்த நண்பர் ஆனந்தராஜ் மற்றும் நண்பர்கள் அபி, ஆகாஷ் ஆகியோருடன் மலைக்கோட்டாலம் கோமுகி ஆற்றில் மது அருந்தி கொண்டிருந்ததாகவும் அப்போது ஆனந்தராஜ் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றபோது மூழ்கி இறந்ததாகவும். இதற்கு காரணம் பிரகாஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் என வரஞ்சரம் போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் பிரகாஷ் உள்பட 3 பேரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் மேலூரில் உள்ள தனது மாமா வீ்ட்டுக்கு சென்ற பிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணைக்கு பயந்து பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.