தலைமை ஆசிரியர் வீட்டில் திருட்டு
ஓசூரில் தலைமை ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.
ஓசூர்:
ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் பிக்கிலியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.