திருப்பூர்-காங்கேயம் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை

திருப்பூர்காங்கேயம் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை;

Update: 2021-08-03 16:34 GMT
திருப்பூர்:
திருப்பூர் -காங்கேயம் ரோட்டில் விபத்துகள் அடிக்கடி நடந்து வருவதால் அவற்றை தடுக்கும் வகையில் சாலையில் வேகத்தடைகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணக்குமார் தலைமையில் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை வேலன் ஓட்டல் அருகில் இருந்து பள்ளக்காட்டுப்புதூர் வரை காங்கேயம் ரோட்டில் குறுக்கு ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடைகள் அமைக்கும் இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
வேலன் ஓட்டல், காயத்திரி ஓட்டல், ராஜீவ்நகர் சந்திப்பு உள்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைப்பதற்கு இடம் அடையாளம் காணப்பட்டது. மேலும் விபத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்

மேலும் செய்திகள்