ஆடிப்பெருக்குவிழாவை யொட்டி அமராவதி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆடிப்பெருக்குவிழாவை யொட்டி அமராவதி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-08-03 16:32 GMT
வெள்ளகோவில்:
ஆடிப்பெருக்குவிழாவை யொட்டி அமராவதி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆடிப்பெருக்கு 
வெள்ளகோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு, காவிரி, தாமிரபரணி, வைகை, சண்முகநதி போன்ற நதிகளுக்கு அவ்வப்போது ஆராத்தி வழிபாடு நடைபெறும்.இதையொட்டி வெள்ளகோவில் அருகே அமராவதி ஆற்றங்கரையில் படித்துறையில் சுற்றுச்சூழலை போற்றவும், இயற்கையைப் பேணவும், ஆடி பெருக்கு முன்னிட்டு நேற்று காலை ஆற்றங்கரையின் படித்துறையில் விநாயகர் வழிபாடு, தலைவாசல் அரசமர மாரியம்மன் வழிபாடு, படித்துறையில் அமராவதி நதிக்கு கலச பூஜை சிறப்பு ஆராதனை ஆகியவை நடைபெற்றன.
 இதில் புதுப்பை, முளையாம்பூண்டி, வெள்ளகோவில், மயில்ரங்கம் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு இந்த விழாவை நடத்தினர்.குண்டடம் சுற்று வட்டாரா கோவில்களான காலபைரவர் கோவில், இராகம்பட்டி காளியம்மன், ஈஸ்வரன் கோவில், உளிட்ட கோவில்கள் அடைக்கப்படிருத்தன இதனால் குண்டடம் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் வர்ணமிட்டு கோலம்போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
குண்டடம்
இதே போல் குண்டடம் பகுதியில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  

மேலும் செய்திகள்