தாராபுரம் நேதாஜி தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

தாராபுரம் நேதாஜி தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2021-08-03 16:30 GMT
குண்டடம்:
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதி நேதாஜி நகா். இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கிருந்து சின்னக்கடை வீதி, வடகரை, நாடார் தெரு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என ஏராளமானோா் சென்று வருகிறாா்கள். இந்த நிலையில் சில நபா்கள் அந்த பகுதியில் இரவு நேரங்களில் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனா்.மேலும் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் கடந்த சில நாட்களாக அங்கு சுத்தம் செய்ய வருவது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதுபோன்று அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாததார சீா்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதோடு, சாக்கடை கால்வாய்களை தூா்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்