கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2021-08-03 15:50 GMT
வீரபாண்டி, 
திருப்பூர் மத்திய போலீஸ் நிலையபகுதிக்குட்பட்ட மங்கலம் சாலை கே.வி.ஆர்.நகர், பூச்சிக்காடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கேவி.ஆர்.நகர் பூச்சிக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
தகவலின் அடிப்படையில் மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் பதர்நிஷா உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  போலீசார் பூச்சிகாடு 2-வது வீதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த விமலையும் (வயது 26),அவருக்கு உடந்தையாக இருந்த முத்துமாரி (39) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்