சேலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை-செல்போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் சேலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் சேலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி மாணவர்
சேலம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் கவுதம் (வயது 21). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. விசுவல் கம்யூனிகேசன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக கவுதம் வீட்டில் இருந்து வந்தார்.
மேலும் அவர் அடிக்கடி செல்போனில் ‘கேம்’ விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் கவுதமை பெற்றோர் கண்டித்ததுடன் அவரிடம் இருந்து செல்போனையும் வாங்கி கொண்டனர். இதனால் மனவேதனை அடைந்த கவுதம் தற்கொலை செய்து கொள்ள வீட்டில் தூக்கில் தொங்கினார்.
போலீசார் விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அயூப்கான் மேல்விசாரணை நடத்தினார்.