2-ம் நிலை பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு
விருதுநகரில் 2-ம் நிலை பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி ேதர்வு நடைபெற்றது. இதில் 324 பேர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்,
விருதுநகரில் 2-ம் நிலை பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி ேதர்வு நடைபெற்றது. இதில் 324 பேர் கலந்து கொண்டனர்.
தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2-ம் நிலை போலீசாருக்கான உடற்தகுதித் தேர்வு கடந்த 26-ந் தேதி விருதுநகரில் தொடங்கியது. முதல் ஐந்து நாட்கள் ஆண்களுக்கான உடற்தகுதித்தேர்வு நடைபெற்றது.
நேற்று பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இந்நகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில் நடைபெறும் தகுதித்தேர்வில் 2 நாட்களும் 868 பேர் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
324 பேர் பங்கேற்பு
இந்தநிலையில் முதல்நாளான நேற்று 468 பேருக்கு தகுதித் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் 324 பெண்கள் மட்டுமே தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களுக்கான உயரம் உள்ளிட்ட உடல் அளவுகள் பெண் போலீசாரால் சரிபார்க்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 400 மீட்டர் தூரத்தினை 2.5 நிமிடத்தில் ஓடி முடிப்பதற்கான தேர்வு நடத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகளும் போலீசாரும் தகுதித்தேர்வு பணியில் ஈடுபட்டனர். இன்றும் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் 214 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.