சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 16 பெண் தொழிலாளர்கள் படுகாயம்

வேப்பந்தட்டை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2021-08-02 21:40 GMT
வேப்பந்தட்டை:

சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது
கடலூர் மாவட்டம் ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலர் ஒரு சரக்கு ஆட்டோவில், விவசாய வேலைக்காக பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேப்பந்தட்டை அருகே காரியானூர் ஜெயந்தி காலனி அருகே சென்றபோது சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்த நிரோஷா (வயது 30), அருளாம்பாள் (38), சத்தியா (20), கருப்பாயி (55), செல்லம்மாள் (45), சின்னம்மா (55) உள்பட 16 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை
இதில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 7 பேரும், கை.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 9 பேரும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சரக்கு ஆட்டோ டிரைவர் வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்த பெரியசாமியை (30) வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்