கேபிள் டி.வி. ஒயர் சேதம்; 3 பேர் மீது வழக்கு

பாவூர்சத்திரம் அருகே கேபிள் டி.வி. ஒயரை சேதப்படுத்தியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-08-02 21:33 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரி சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாத பாண்டியன் (வயது 39). இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வரும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் லோகநாத பாண்டியனுக்கு சொந்தமான கேபிள் ஒயர்களை குறும்பலாபேரியைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் மதிசெல்வன், அவரிடம் பணியாற்றும் பாஸ்கர், கீழப்பாவூரைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் ரகு ஆகிய 3 பேரும் வெட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மதிசெல்வன், பாஸ்கர், ரகு ஆகிய 3 பேர் மீது பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்