பண்ணாரி, பவானி, சென்னிமலை உள்பட 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

பண்ணாரி, பவானி, ெசன்னிமலை உள்பட 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-08-02 21:25 GMT
ஈரோடு
பண்ணாரி, பவானி, ெசன்னிமலை உள்பட 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். 
19 கோவில்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி பண்ணாரியில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சிவகிரி தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், ஈரோடு சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவில், கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
சாமி தரிசனத்துக்கு தடை
மேலும் கோபி பவளமலை முத்துக்குமார சாமி கோவில், நஞ்சைகாளமங்கலம் மத்யபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், ஈரோடு நஞ்சைகாளமங்கலம் நாகேஸ்வரர் குலவிளக்கம்மன் கோவில், வைராபாளையம் காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில்.
காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோவில், நசியனூர் மதுரகாளியம்மன் கோவில், திருவாச்சி கரியபெருமாள் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவில், அம்மாபேட்டை சொக்கநாத சாமி கோவில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்