டிராக்டரில் சரள்மண் கடத்தல்; வாலிபர் கைது

மானூர் அருகே டிராக்டரில் சரள்மண் கடத்தியது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-02 21:12 GMT
மானூர்:
மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் மானூர் அருகே உள்ள கரம்பை விலக்கில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு டிராக்டரில் சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் கரம்பையை சேர்ந்த கணேசன் மகன் மாரியப்பன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரள் மண்ணுடன் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்