ரூ.86 லட்சம் பிரீமியத் தொகை மோசடி செய்தவர் கைது
ரூ.86 லட்சம் பிரீமியத் தொகை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார
திருச்சி
கடந்த 2017-ம் ஆண்டு வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தங்களை எல்.ஐ.சி. ஊழியர்கள் என தொலைபேசி மூலம் பேசி அறிமுகம் செய்து கொண்டு திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த அப்துல்கனி பாட்சா என்ற ஏ.பி.எல்.பர்வீன்கனி என்பவரிடம் அவரது எல்.ஐ.சி பாலிசி முதிர்வடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த தொகையை மத்திய அரசின் சில திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனப்பேசி அதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.86 லட்சத்து 36 ஆயிரத்து 963-ஐ ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யச்சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். இது சம்பந்தமான வழக்கு திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. பின்னர் தமிழக டி.ஜி.பி. உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணைக்கு மாற்றப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின்படி பெரம்பலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஏட்டுகள் சந்திரசேகரன் ஆனந்த்பாபு ஆகியோர் டெல்லி சென்று முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய ஒருவரான கிழக்கு டெல்லியை சேர்ந்த அபினேஷ்குமார்சிங் என்ற அமன் (வயது 26) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அமன் திருச்சி கொண்டு வரப்பட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.