கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சைக்கு 360 பேர் உயிரிழப்பு

கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 360 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-08-02 21:01 GMT
பெங்களூரு: கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மீண்டவர்களில் சிலரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கர்நாடகத்தில் இதுவரை 3,703 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 360 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தலைநகர் பெங்களூருவை பொறுத்தவரையில் 1,174 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதில் 112 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கருப்பு பூஞ்சை நோய் அதிகளவில் பரவி வருவதால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகி உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்