சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உழவாரப்பணி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது
சமயபுரம்
தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகளின் உத்தரவின்படி கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நேற்று உழவாரப்பணி நடைபெற்றது. கோபுர சிற்பங்களில் உள்ள தூசிகளை சுத்தம் செய்தும், கோவிலில் கொடிமரம் உள்ள பகுதி மூலஸ்தானம் பக்தர்கள் நிற்கும் வரிசை முடிமண்டபம் பக்தர்கள் தங்கும் மண்டபம் உள்பிரகாரம், மொட்டைமாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தினர். மேலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.