மணப்பாறை
மணப்பாறையை அடுத்த சாம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் எந்திரத்தின் டிரைவராக கரூர் மாவட்டம் வடசேரி காவல்காரன்பட்டியைச் சேர்ந்த மணிவேல் (வயது 33) என்பவர் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல நேற்று அவர் எந்திரத்தின் மூலம் கற்களை உடைத்துக் கொண்டிருந்தபோது எந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணமல்லி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்களும் வந்து பார்த்தனர். பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த மணிவேல் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.