தனியார் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
பணி நீக்கம் செய்ததை கண்டித்து தனியார் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
வில்லியனூர், ஆக.3-
மங்கலம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த பெண் தொழிலாளர்களை திடீரென பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பெண் தொழிலாளர்கள் மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சங்கர் தலைமையில் தனியார் நிறுவன கேட்டை இழுத்து பூட்டி போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பாக தனியார் நிறுவன அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக பெண்கள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.