வாழைத்தார்கள் விலை உயர்வு

வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது

Update: 2021-08-02 19:18 GMT
நொய்யல்
புகளூர், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, கோம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர். வாழைத்தார் விளைந்தவுடன் பறித்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கின்றனர். இந்தநிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கு விற்றது நேற்று ரூ.450-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கு விற்றது ரூ.350-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கு விற்றது ரூ.450-க்கும்,  பச்சை நாடன் ரூ.250-க்கு விற்றது ரூ.350-க்கும், மொந்தன் ரூ.300 க்கு விற்றது ரூ.400 விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்