ராமநாதபுரம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில் ரத வீதி பக்தர்கள் இல்லாமல் நேற்று வெறிச்சோடி கிடந்தது.