செல்போன், பணம் திருட்டு

தாராபுரத்தில் 2 வீடுகளில் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-08-02 17:58 GMT
தாராபுரம்
தாராபுரத்தில் 2 வீடுகளில் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.  
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
செல்போன் திருட்டு
தாராபுரம் பீம ராயர் மெயின் வீதியை சேர்ந்தவர் உலகநாதன் வயது 44. அவரது அண்ணன் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் உறவினர்கள் வந்து இருந்தனர். அவர்கள் நேற்று முன்தினம்  இரவு மேல்புற மாடியில் சிலரும், கீழ்தளத்தில் சிலரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மொட்டை மாடியின் வழியாக வீட்டுக்குள் ஒரு மர்ம ஆசாமி புகுந்துள்ளார். அந்த ஆசாமி, அங்கு வைக்கப்பட்டிருந்த உறவினர்களின் செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை திருடியுள்ளார். 
அப்போது சத்தம்கேட்டு தூங்கிக்கொண்டிருந்வர்களில் ஒருவர் எழுந்து பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவர் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் கூச்சல் போடவும், அந்த ஆசாமி தப்பி ஓடினார். 
இதையடுத்து அவரை துரத்தியபோது அங்கு தயாராக நிறுத்தி இருந்த மற்றொரு ஆசாமியின் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றார்.  
லாரி டிரைவர் வீடு
அதே போால் நாராயணன் பிள்ளை தெருவை சேர்ந்த லாரி டிரைவர் லட்சுமணன். இவருடைய வீட்டின் மேல் கூரையை பிரித்து உள்ளே இறங்கிய ஆசாமி அங்கிருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். இதுகுறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்தில் உலகநாதன் மற்றம் லட்சுமணன் இருவரும்  புகார் கொடுத்தனர். புகார் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் மற்றும் பணம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்