கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம். தரிசனத்துக்கு தடைவிதித்ததை கண்டித்து நடந்தது.

கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-08-02 17:24 GMT
ஆற்காடு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆடி மாதம் முருகன் கோவில்களில் நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வரதடைவிதிக்கப்பட்டதுடன், கோவிலில் சாமி தரிசனம்செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் காவடி செலுத்தவும், வழிபடவும் அனுமதிக்காத தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவில் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் மகேஷ் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக பக்தர்கள் காவடி செலுத்த, தரிசனம் செய்ய அனுமதிக்க கோரியும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில்  ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்