2-ம் நிலை காவலர் பணி உடற்தகுதியில் 196 பெண்கள் தேர்வு

2-ம் நிலை காவலர் பணி உடற்தகுதியில் 196 பெண்கள் தேர்வு.;

Update: 2021-08-02 17:10 GMT
வேலூர்,

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்து வருகிறது. ஆண்களுக்கு முடிவுற்ற நிலையில் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள 400 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 122 பேர் பங்கேற்கவில்லை. கலந்து கொண்ட 278 பேரில், 82 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். 196 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடற்தகுதி தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்